ETV Bharat / state

"3 புலிகளால் 3 லட்சம் பேர் அழிந்து வருகிறோம்" - நெல்லை விவசாயிகள் வேதனை! - NELLAI FARMERS ISSUE

நெல்லையில் வெறும் மூன்று புலிகளுக்காக மூன்று லட்சம் விவசாயிகள் அழந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2025, 12:53 PM IST

திருநெல்வேலி: காட்டுப்பன்றி பிரச்சனை உள்பட மனித - விலங்கு மோதல் தடுப்பு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளைத் தெரிவிக்க, நெல்லைக்கு வருகை தரும் முதலமைச்சரை விவசாயிகள் சந்திக்க வேண்டும் எனவும், அதற்காக ஆட்சியர் ஏற்பாடு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று (ஜன.24) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில், விவசாயிகளுக்கு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் பேசினார்.

அதைத் தொடர்ந்து விவசாயிகள் தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் விளை நிலங்களில் கேரள மாநிலம் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆட்சியர் கார்த்திகேயன்," நமது மாவட்டத்தில் மூன்று இடங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் சுமார் 40 லாரிகளில் மருத்துவ கழிவுகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பெரும்படையார் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

அதேபோல் தாமிரபரணி ஆற்றிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைத் தடுக்க தடுப்பணைகள் கட்டுவது குறித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த ஆட்சியர், தடுப்பணைகள் சும்மா சும்மா எல்லா இடத்திலும் கட்ட முடியாது. தேவைப்படும் இடத்தில் மட்டும் தான் கட்ட முடியும், அந்த வகையில் எலுமிச்சை ஆறு பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. பொதுவாக கடலில் தண்ணீர் கலக்க வேண்டும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கலப்பதைத் தான் தடுக்க முடியும் என்றார். தொடர்ந்து காட்டுப் பன்றிகள் அட்டகாசம் குறித்தும் விவசாயிகள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.

இதையும் படிங்க: கிராம மக்களை காக்க களமிறங்கிய கும்கி யானை முத்து.. நிம்மதியில் பெருமூச்சு விட்ட மக்கள்!

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பெரும்படையார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தாண்டியும் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகரிக்கிறது. இதுபோல் காட்டு யானைகளும் பயிர்களை அழித்து நாசம் செய்கிறது, ஒரே விவசாயிக்கு 2,700 வாழைகளை சேதப்படுத்தியுள்ளது.

அதற்காக போராடினால் எங்கள் மீது வழக்கு போடுகிறார்கள், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதில் இருந்து விவசாயம் அழிவைச் சந்தித்து வருகிறது. மூன்றே மூன்று புலிகள் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த 3 புலிகளுக்காக நாங்கள் மூன்று லட்சம் விவசாயிகள் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். நிவாரணமும் கிடைப்பதில்லை. எனவே தான் முதலமைச்சர் அடுத்த மாதம் நெல்லைக்கு வரும் போது அவரை சந்தித்து முறையிட ஏற்பாடு செய்யும் படி கேட்டுள்ளோம். ஏற்பாடு செய்யாவிட்டால் அனைவரையும் ஒருங்கிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.