சாலை மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்கள் கைது! - சாலை மறியலில் ஈடுபட்ட ரேசன் கடை பணியாளர்கள் கைது
🎬 Watch Now: Feature Video
தேனியில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். பணி வரன்முறை செய்யப்படாத 5 ஆயிரம் பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நியாய விலை கடை பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனால், மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.