தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை - heavy rain in madurai
🎬 Watch Now: Feature Video
மதுரையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று (ஜூன். 05) மாலை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.
அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்திலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.
வேலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் அருகே உள்ள பனையம்பள்ளி, உயிலம்பாளையம், மல்லியம்பட்டி கிராமங்களில் இன்று அதிகாலை பெய்த கன மழையால் அப்பகுதியில் உள்ள குட்டை, தடுப்பணைகளுக்கு நீர் வரத் தொடங்கியுள்ளது..
TAGGED:
heavy rain in madurai