பாலிடெக்னிக் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு! - ariyalur
🎬 Watch Now: Feature Video
அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பணிபுரிந்த தற்காலிக பெண் விரிவுரையாளர் சிவசக்தியை அண்மையில் கல்லூரி நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கியது. இதனால் கோபமடைந்த மாணவர்கள், அந்த விரிவுரையாளரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் எனக்கூறி வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த கல்லூரி முதல்வர், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் மாணவர்கள் கல்லூரிக்கு சென்றனர்.