மருதூர் ஏழை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்!
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம் : மருதூர் பகுதியில் அமைந்துள்ள ஏழை மாரியம்மன் கோயிலில் விநாயகர், பாலமுருகன், மாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில், ஏழை மாரியம்மன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சந்நிதிகளின், மூலஸ்தான கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.