கொடைக்கானல் படகு சவாரி: மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்த சுற்றுலாப் பயணிகள் - கொடைக்கானல் சுற்றுலா
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், விடுமுறை நாள்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இடங்களாக மோயர் பாயின்ட், குணா குகை, தூண்பாறை, பைன்மரக் காடுகள் எனப் பல்வேறு சுற்றுலா இடங்களை பயணிகள் கண்டுகளிப்பார்கள். லேசான சாரல் மழையில் நனைந்தபடி நட்சத்திர ஏரியில் படகு சவாரியும் செய்து, தங்கள் பயணத்தை இனிதே நிறைவுசெய்வார்கள்.