குமரியில் கனமழை: பொதுமக்கள் அவதி! - விளைநிலங்கள் சேதம்
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் பல கிராமங்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. நாகர்கோவில் நகரப் பகுதிகளிலும் தாழ்வான தெருக்களில் பெருமளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று பழைய ஆற்றங்கரை ஓரம் உள்ள நிலங்களில் பயிரிடப்பட்ட முதல் போக சாகுபடிப் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.