தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஒத்திகை நிகழ்ச்சி! - Thoothukudi
🎬 Watch Now: Feature Video
மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அச்சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது, தீயை எப்படி அணைப்பது, தீ விபத்தில் காயமடைந்தவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் மூலம் ஒத்திகைப் பார்க்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் நடத்திக் காட்டப்பட்டது. இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் தீயணைப்பு அலுவலர், 20 கமாண்டோ பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்கள், 2 தீயணைப்பு வண்டிகள், 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவமனை ஊழியர்கள் 20 பேர் பயன்படுத்தப்பட்டனர்.