ETV Bharat / state

ராஜீவ் காந்தியை குறித்து பேசிய வழக்கு; சீமானுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது - உயர் நீதிமன்றம்! - SEEMAN DEFAMATION CASE

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்களிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சீமான் (கோப்புப்படம்)
சீமான் (கோப்புப்படம்) (Credit - @Seeman4TN X Account)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2025, 6:46 PM IST

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்களிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும், இவ்வழக்கில் காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி தேச துரோகி'' என பேசி, வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: நாளைக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகிறது! - முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பான பதிவு!

இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, சீமானின் பேச்சு வன்முறையை தூண்டியது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என சீமான் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் சீமானுக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, பிடிவாரண்டை திரும்பப் பெறக் கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது எனவும் கூறி, சீமானின் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.