பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா: பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா திமுக அரசு? - பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களுக்குப் பக்தர்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாளை மறுநாள் ஜனவரி 12ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதை முன்னிட்டு தைப்பூசம் முடியும் வரை பழனி கோவிலுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழனிக்குப் பாதயாத்திரையாக வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லாத நாள்களில் கிரிவலம் சுற்றி வந்து அடிவாரம் பாத விநாயகர் கோயில் சென்று சாமி கும்பிட்டு விட்டுத் திரும்பி செல்லும் நிலையில் உள்ளது.
Last Updated : Jan 10, 2022, 2:18 PM IST