வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயிலில் 'ஆருத்ரா தரிசனம்' விழா - Arutra Darshan
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10057992-thumbnail-3x2-pbl.jpg)
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் பகுதியில் உள்ளது அருள்மிகு வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் திருக்கோயில். வானர அரசரான வாலி இவ்வூரில் சிவனை பூஜித்து வழிபட்டு சென்றதால் வாலிகண்டபுரம் என்ற பெயர் பெற்றது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோயில் மிகவும் பழமையானது. இந்நிலையில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை நடராச பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, ருத்திராட்சம், பன்னீர், துளசி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டு சென்றனர்.