கண்களை மூடியபடி பைக் ஓட்டி வாக்குச் சேகரித்த அதிமுக தொண்டர்! - aiadmk cadre involves election campaign
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11175627-263-11175627-1616817958697.jpg)
கோயம்புத்தூர்: குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த யூஎம்டி ராஜா என்ற இளைஞர் அதிமுகவிற்காக வித்தியாசமான பாணியில் வாக்குச் சேகரித்தார். தனது இரு கண்களையும் கறுப்புத் துணியால் கட்டிக்கொண்ட ராஜா, தனது கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டியபடி வாக்குச் சேகரித்தார். இவரது வித்தியாசமான பரப்புரை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. தவிர, தேர்தலுக்காகப் பல விழிப்புணர்வு மணல் சிற்பங்கள், மினியச்சர் பொருள்கள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.