சென்னை: சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கம் கூட்ட அரங்கில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (பிப்.14) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஆவடி நாசர், சி.வெ.கணேசன், காந்தி, துணைச் சபாநாயகர் பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வு முடிந்த பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டது. நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட சில காரணிகளால் 10 சதவீத பணிகள் நிலுவையில் உள்ளது. அதையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின் படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு… pic.twitter.com/8eSTAJhXlp
— K.N.NEHRU (@KN_NEHRU) February 14, 2025
நகராட்சி நிர்வாகத் துறையில் நிதி சிக்கல் என எதுவுமில்லை. நாளை மதுரையிலும், பிப்ரவரி 20ஆம் தேதி கோயம்புத்தூரிலும், பிப்ரவரி 21ஆம் தேதி திருச்சியிலும் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. மேலும், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் குடிநீர் வினியோகம் தொடர்பாக இன்று கூட்டத்தில் பேசப்பட்டது.
இதையும் படிங்க: அண்ணாமலையுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்...அமைச்சர் மா. சுப்பிரமணியன் சவால்!
அதில் 40 ஆண்டுகளுக்கு முன்னால் பதிக்கப்பட்ட பைப்புகளை அப்புறப்படுத்துவது. மேலும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் புதிய பைப்புகள் அமைக்கப்பட்டு சீரான குடிநீர் வினியோகம் வழங்கப்படுவது குறித்து இன்று ஆலோசனை நடத்தப்பட்டது" என்று கூறினார்.