ஆம்பூர் கோயிலில் கிருபானந்த வாரியர் சுவாமிகள் விழா! - Tirupathur district news in tamil
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருள்மிகு சமயவல்லி சமேத சுயம்பு ஸ்ரீரி நாகநாத சுவாமி திருக்கோயிலில் அருணகிரிநாதர், கிருபானந்த வாரியார் சுவாமிகள் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி மூலவர், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.