மாணவர்களிடம் படத்தை கொண்டு செல்லும் ‘வானம் கொட்டட்டும்’ படக்குழு! - வானம் கொட்டட்டும் பாடல்
🎬 Watch Now: Feature Video
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள படம் வானம் கொட்டட்டும். இதில் விக்ரம் பிரபுவுடன் மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் இதனை தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்நிலையில் இப்படத்தை மாணவர்களிடையே கொண்டு செல்லும் முயற்சியில் படக்குழுவினர் பல்வேறு கல்லூரி நிகழ்சியில் கலந்துகொண்டு வருகின்றனர்.