புவனேஸ்வர்: வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தினத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, போரை விடவும் அமைதியை முன்னெடுப்பதாக இந்தியா உள்ளது. 2047ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "புத்தரின் அமைதிவாத சிந்தாந்தத்தை பற்றி பேசினார். சர்வதேச அளவில் அமைதியை உருவாக்கும் நாடாக இந்தியாவின் பங்கை விரிவாக்க வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.
இதயங்களில் இந்தியா துடிக்கிறது: இந்த நிகழ்வில் மேலும் பேசிய பிரதமர் மோடி, "வலுவான பாரம்பரியத்தின் காரணமாக, எதிர்காலம் போரில் அல்ல, ஆனால் புத்தரின் அமைதியில் உள்ளது என்பதை இந்தியா உலகத்திடம் சொல்ல முடியும். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனரோ அந்தந்த நாடுகளின் இந்திய தூதர்களாக உள்ளனர் என எப்போதுமே நான் கருதுகின்றேன். இந்தியாவில் விழா காலங்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வந்திருப்பது என்பது இந்தியாவுடன் நெருக்கமான ஒரு பிணைப்பை அளிக்கும் வாய்ப்பை தருகிறது. அவர்களின் மதிப்பீடு முறைகள் உலகத்துடன் தடையின்றி ஒருங்கிணைப்பதாக உள்ளது. அதே போல இந்தியாவின் நெறிமுறைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும் உள்ளது.
Pleased to speak at the Pravasi Bharatiya Divas convention in Bhubaneswar. The Indian diaspora has excelled worldwide. Their accomplishments make us proud. https://t.co/dr3jarPSF4
— Narendra Modi (@narendramodi) January 9, 2025
வெளிநாடுகளில் சந்திக்கும் போது உங்களுடைய அன்பு மற்றும் ஆசிர்வாதத்தை என்னால் மறக்க இயலாது. அவை என்னுடன் தொடர்ந்து இருக்கின்றன. உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களை உலகத் தலைவர்கள் எப்போதுமே வாழ்த்துவதால் இந்த தருணத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். சமூகத்துடன் இணைந்திருத்தல், விதிகள், பாரம்பரியத்துக்கு மதிப்பளித்தல், வெளிநாடுகளில் கவுரவமாக பணியாற்றுதல், அந்தந்த நாடுகளின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக பணியாற்றுதல் என இருந்தபோதிலும் இன்னும் அவர்களின் இதயங்களில் இந்தியா துடித்துக் கொண்டிருக்கிறது.
சமூக மதிப்பீடுகள்: சிக்கலான தருணங்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு உதவுவதை நாடு கடமையாக கருதுகிறது. நம்ப முடியாத வேகம் மற்றும் அளவில் 21ஆம் நூற்றாண்டில் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. பல தசாப்தங்கள் வர உள்ளன. எனினும் மிகவும் இளம் வயது கொண்ட திறன் கொண்ட மக்கள் தொகை கொண்டதாக இந்தியா தொடர்ந்து இருக்கும். உலகின் திறன் கொண்ட திறனாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் வளம் படைத்ததாக இந்தியா திகழ்கிறது.
உங்களை எல்லாம் சந்திக்கும்போது நான் மகிழ்ச்சியாக உணர்கின்றேன். உங்களிடம் இருந்து பெறும் உங்களின் அன்பு மற்றும் ஆசிர்வாதத்தை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். உங்களால் நான் மிகவும் தன்னம்பிக்கையுடனும் பெருமையுடனும் இருப்பதால் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகின்றேன். கடந்த 10 ஆண்டுகளில் பல உலகத் தலைவர்களை சந்தித்திருக்கின்றேன். அவர்கள் எல்லாம் அவர்களது நாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினரை போற்றுகின்றனர். நீங்கள் கொண்டிருக்கும் சமூக மதிப்பீடுகள் என்ற ஒருபெரிய காரணம்தான் அதன்பின்னணியில் உள்ளது.
இந்தியா ஜனநாயகத்தின் தாய் மட்டுமல்ல. இங்கே வாழும் மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஜனநாயகம் உள்ளது. இன்றைக்கு உலகம் இந்தியா சொல்வதை கேட்கிறது. இப்போது வலுவான கண்ணோட்டங்களை கொண்டிருப்பதால் மட்டும் அல்ல, உலகளாவிய தெற்கு நாடுகளும் கூட இந்தியா சொல்வதை கேட்கிறது.
வளர்ச்சியடைந்த நாடாக பங்களியுங்கள்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை உபயோகிக்கவும், முன்னெடுக்கவும் வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். இது எங்கள் தொழிலாளியின் நேர்த்தியான கைவினைத்திறனின் அடையாளத்தைப் பற்றி பேசுகிறது.இந்தச் செய்தியைப் பரப்ப வேண்டிய பொறுப்பு உங்களுக்கும் எனக்கும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள், இந்தியா 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைவதில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்களித்தது போல, 2047ஆம்ஆண்டில் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதிலும் பங்களிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.