செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரான அருண்ராஜ், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி சமுத்திரபாண்டியனின் மகன் ஆவார். இவருக்கும் மேகநாதன், ஜெயந்தி தம்பதியரின் மகளான மருத்துவர் கௌசிகாவுக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.
இதனையடுத்து இன்று (பிப்.10) காலை 6.30 - 7.30 மணிக்கு திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி கோயிலில் உள்ள உற்சவ மண்டபத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜுக்கும், மருத்துவர் கௌசிகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முன்னிட்டு திருப்போரூர் முருகன் கோயிலில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தின் சார்பாக செய்யப்பட்டன.
இத்திருமண விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில் இரு குடும்பத்தார்களும் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு மணமகன் மணமகள் இருவரையும் வாழ்த்தினர்.
இதையும் படிங்க: சிக்னலில் நின்று கொண்டிருந்த பைக் மீது மோதிய லாரி.. கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சோகம்! - CHENGALPATTU BIKE ACCIDENT
அதனை தொடர்ந்து இருவரின் திருமண வரவேற்பு விழா வரும் வெள்ளிக்கிழமை 14ஆம் தேதி மாலை சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.