'சூரரைப் போற்று' டீஸர் வெளியீடு: பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய ரசிகர்கள் - சூரரைப் போற்று டீஸர் வெளியீடால் பாலபிஷேகம் செய்து கொண்டாடிய ரசிகர்கள்
🎬 Watch Now: Feature Video
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான 'சூரரைப் போற்று' டீஸர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியது. இதை முன்னிட்டு சேலத்தில் சூர்யா ஃபேன்ஸ் கிளப் சார்பில் 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் டீசர் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியிலுள்ள திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதையடுத்து அங்குள்ள ரசிகர்கள் சூர்யாவின் பேனருக்கு பாலபிஷேகம் செய்தனர். மேலும் தாரை தப்பட்டை அடித்து, பட்டாசு வெடித்த ரசிகர்கள், திரையரங்கில் பிரமாண்ட கேக்கையும் வெட்டி கொண்டாடினர்.