ETV Bharat / entertainment

'கல்லூரியில் குடித்துவிட்டு பாடினேன்'.. பாட்டில் ராதா பட நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின் சர்ச்சை பேச்சு! - BOTTLE RADHA MOVIE TRAILER LAUNCH

Bottle Radha Movie Trailer Launch: இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள "பாட்டில் ராதா" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் குடிப்பழக்கத்தை குறித்து பேசியது விவாதமாகியுள்ளது.

மிஷ்கின்
மிஷ்கின் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2025, 5:57 PM IST

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள "பாட்டில் ராதா" திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள "பாட்டில் ராதா" திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் பா. ரஞ்சித், வெற்றி மாறன், மிஷ்கின், அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் குடி பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாவது என்பது குடி நோய் என்றும் பேசினார்கள். ஆனால், இயக்குநர் மிஷ்கின் மட்டும் அவர்களிடமிருந்து வேறுபட்டு குடிப்பழக்கம் எத்தனை புனிதமானது என சர்ச்சையாக பேசியுள்ளார்.

அவர் பேசும் போது, இந்த மேடையில், ‘தமிழ் சினிமாவில் அதிகமாக குடித்தவனும் குடித்துக்கொண்டிருப்பவனும் நான் தான். தமிழ்நாட்டில் ஆதியில் இருந்து குடிப்பழக்கம் இருக்கிறது. எல்லா சமூகங்களிலும் மதுப் பழக்கம் இருக்கிறது. மதுப்பழக்கம் இல்லாத சமூகமே இல்லை. உலகம் முழுவதும் எங்கு போனாலும் மது இருக்கிறது. பல்வேறு நாடுகளில் பல வருடங்கள் பழமையான ஒயினை விலை மதிப்பில்லாததாக பார்க்கிறார்கள். அதனால் மதுவைப் பற்றி எனக்கு முழு விவரமும் தெரியும்.

நானே சாராயம் காய்ச்சும் அளவுக்கு தொழில்நுட்பங்கள் எனக்கு தெரியும். நானும் மதுவை விரும்பி நேசித்து குடிப்பவன்தான். ஆனால், ஒரு நாள் கூட நான் அந்த மதுவிற்கு கட்டுப்பட்டது கிடையாது. நான் உதவி இயக்குனராக இருக்கும் பொழுது, குடிக்க ஆரம்பித்து சினிமா பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருப்போம்.

நான் இளையராஜாவை பாட ஆரம்பித்து விடுவேன். அதனால் யாராவது மதுவை வாங்கி கொடுத்து விடுவார்கள். கல்லூரியில் படிக்கும்போது மது அருந்திவிட்டு பாட்டுப் போட்டியில் இளையராஜாவின் 'பொன்னைப் போல ஆத்தா' பாடலைப் பாடினேன். மூன்று வருடங்களும் அதே பாடல்தான் பாடினேன், மூன்று வருடங்களும் நான் தான் முதல் பரிசு வாங்கினேன். குடி இருக்கும்பொழுது எனது வாழ்க்கை சந்தோசமானதாகவும், நம்பிக்கையானதாகவும் இருந்துகொண்டே இருந்தது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பெரும்பான்மையானோர் மிகவும் நல்ல மனிதர்களாக இருப்பார்கள். அவர்கள் ஏன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும், அதற்கு காரணம் இந்த சமூகம் கொடுக்கும் அழுத்தம் தான். இன்று எது தான் நம்மை அடிமையாக்கவில்லை. மொபைலை பார்த்துக்கொண்டே இருக்கிறோம். இன்ஸ்டாகிராமில் கண்டவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

இதைவிட ஒரு அடிமைத்தனம் இருக்க முடியுமா என்ன? இன்னும் கொஞ்ச நாட்களில் ஐபிஎல் வந்துவிடும்; நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அதை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருப்போம். தோனி கடைசி வரை ஓய்வு எடுக்கப் போவதே இல்லை; சச்சின் டெண்டுல்கர் தொப்பையோடு வந்து ஆட தான் போகிறார்.

முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும் என போவது, ஹீரோக்களுக்கு கட் அவுட் வைத்து பால் ஊற்றுவது இதெல்லாம் அந்த பழக்கத்திற்கு அடிமையாவது இல்லையா? எந்த பழக்கத்தையும் மிக அதிகமாக செய்யும்போது அது பிரச்சனைதான். நான் மிகப்பெரிய குடிகாரன்தான். ஆனால் எனக்கு அதைவிட மிகப்பெரிய போதை இருக்கிறது அதுதான் சினிமா. குரோசாவா, இளையராஜா எனக்கு பெரிய போதை.

இதையும் படிங்க: நெல்லையில் களைகட்டிய இளையராஜாவின் இசை நிகழ்ச்சி.. அடுத்த எந்த ஊர்? கேள்வி எழுப்பிய இசைஞானி

இளையராஜா என்ற ஒருத்தன் இருக்கிறான் குடித்துவிட்டால், அவரது பாடலை தான் கேட்டுக்கொண்டிருப்பேன். மனிதர்களை அதிகமாக குடிகாரர்களாக மாற்றுவதும் இளையராஜாதான். குடிப்பவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான நம்பிக்கையாக இருக்கும். ஏனென்றால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை நாம் பார்க்க மாட்டோம்.

இந்த படம் அவர்களை பார்க்க வைக்கிறது. குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் குடும்பங்கள் அவர்களை மீட்டு கொண்டு வர வேண்டும் என இந்த படம் சொல்கிறது. குடிப்பதை வைத்து மனிதர்களை எடை போடுவதை தவிர்க்க வேண்டும். இந்தப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது, குடிப்பவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை கிடைக்கும்’ என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.