நிஜவாழ்க்கையிலும் புனித் ராஜ்குமார் ஹீரோ - சிவகார்த்திகேயன் - நடிகர் சிவகார்த்திகேயனின் படங்கள்
🎬 Watch Now: Feature Video
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இனி வரும் நடிகர்களுக்கு புனித் ராஜ்குமார் ஒரு உத்வேகமாகவும் முன் உதாரணமாகவும் இருப்பார். புனித் ராஜ்குமாரின் மறைவை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. ஒரு மாதத்திற்கு முன் எனக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். ஒட்டுமொத்த திரைத்துறையிலும் புனித் ராஜ்குமார் ஒரு நல்ல மனிதராக இருக்கிறார். திரையில் மட்டுமல்ல, நிஜவாழ்க்கையிலும் புனித் ராஜ்குமார் ஒரு ஹீரோ தான் என்றார்.