Thiruneer Annamalaiyar: திருநீர் அண்ணாமலையார் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத காட்சி! - etvbharat tamil
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: கிரிவலப்பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதப் பிறப்பின் முதல் நாளாம் அன்று திருநீர் அண்ணாமலையார் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வம் நிகழ்வது வழக்கம். தற்போது இந்நிகழ்வானது சூரியன் அண்ணாமலையாரை வணங்கும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
அதன்படி, சித்திரை மாத முதல் நாளான இன்று காலை திருநீர் அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவருக்குப் பால், தயிர், சந்தனம், விபூதி, அபிஷேக பொடி உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சூரிய உதயத்திற்குப் பின் சிறிது நேரம் கழித்து கோயில் மூலவர் கருவறையில் உள்ள அண்ணாமலையார் மீது சூரிய ஒளி விழுத்தொடங்கியது.
மேலும், அந்த சூரிய ஒளி அண்ணாமலையார் மீது விழுந்த பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்கச் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சூரியன் அண்ணாமலையார் வணங்கும் காட்சியினை கண்டு மகிழ்ந்து சுவாமி தரிசனம் செய்தனர்.