கூடலூர் அருகே இரவில் உலா வரும் ஒற்றை காட்டு யானை.. தடுப்புக் கம்பிகளை உடைத்து அட்டகாசம்! - நீலகிரி செய்திகள்
🎬 Watch Now: Feature Video
Published : Nov 30, 2023, 1:10 PM IST
நீலகிரி: கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நடு கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில், நேற்று (நவ.29) இரவு ஒற்றை யானை ஒன்று அப்பகுதியில் நடமாடியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று (நவ.30) அதிகாலை 3 மணி அளவில் கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் ஒற்றை யானை வந்துள்ளது.
இவ்வாறு அந்த யானை வாயில் வாழைக் கன்றுகளை கடித்தவாறு சென்ற பொழுது, சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பை ஆக்ரோஷமாகத் தள்ளி விட்டு விட்டு, மீண்டும் கூடலூர் சாலையில் பயணித்துள்ளது. இதன் சிசிடிவி வீடியோ பதிவு தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் வனத்துறையினர் இரவு நேரத்தில் கூடலூர் பகுதியில் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என்றும், வனவிலங்குகளை கண்ட உடன் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இருப்பினும், சாலை ஓரத்தில் நடமாடும் காட்டுயானை எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் புகுந்து விட வாய்ப்பு உள்ளதால், வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.