‘நீ தான் பொன்னியின் செல்வன்’ என கூறியபோது புல்லரித்து விட்டது - ஜெயம் ரவி - த்ரிஷா
🎬 Watch Now: Feature Video
ஜெயம் ரவி பேசும்போது, “எங்கள் ஒவ்வொருவக்கும் பெருமைதான். ஒருமுறை மணி சாரின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தவறிவிட்டது. அதற்காக என்னை திட்டுவதற்காக தான் அழைக்கிறார் என சென்றேன். ஆனால், நீ தான் பொன்னியின் செல்வனாக நடிக்க போகிறாய் என்று கூறினார். மணி சார் என்னை அழைத்து நீ தான் பொன்னியின் செல்வனாக நடிக்கப் போகிறாய் என கூறிய தருணம் எனக்கு புல்லரித்து விட்டது. பல லட்சம் பேர் இந்த புத்தகத்தை படித்திருக்கிறார்கள். பல ஆயிரம் பேர் இதைப் பற்றி பேசியிருக்கிறார்கள். ஆனால், இதை ஒரே ஆளாக திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் மணி சார். அவருக்கு தலை வணங்குகிறேன்” என பேசினார்
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST