"காவிரியை திறந்து விட நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்" - திருமாவளவன்! - சென்னை மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
Published : Sep 18, 2023, 3:51 PM IST
சென்னை: மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, "கர்நாடகா அரசு அந்த மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு முடிவை எடுத்துள்ளது.
அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீரின் அளவு என்ன என்பதை சொல்லியிருக்கிறது. நொடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்பது தான் வரையறை. போதிய தண்ணீர் இல்லாததால் திறந்து விட இயலாது என கர்நாடக அரசு சொல்லி வருகிறது.
தமிழ்நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு நமக்கான தேவையை பெற வலியுறுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழகத்திற்கு திறந்து விடக்கூடிய தண்ணீரின் அளவை சரியாக கொடுக்க வேண்டும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சந்தித்து கோரிக்கை முன்வைக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து செல்கிறோம். அதை அவர்கள் நடைமுறை படுத்த முன்வருவார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 4.39 லட்சம் ரூபாய் திருடிய CISF வீரர்..! காஷ்மீர் விரைந்துள்ள தனிப்படை போலீசார்..!