Video.. வாணியம்பாடி அருகே பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. - வாணியம்பாதி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16221328-thumbnail-3x2-paalaru.jpg)
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தமிழ்நாடு ஆந்திரா எல்லை பகுதியில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரா அரசு பாலாறு குறுக்கே 22 தடுப்பணைகள் கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் வராதவாறு தடுத்து தமிழக விவசாயிகளை வஞ்சித்து வந்தனர். தற்போது தொடர் மழை காரணமாக 2வது முறையாக ஆந்திரா அரசு கங்குந்தி ஊராட்சி பெரும்பள்ளம் பகுதியில் உள்ள 12 அடி உயரமுள்ள தடுப்பணையை தாண்டி தமிழக பாலாற்றில் வினாடிக்கு 135 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேலும் தடுப்பணைகள் ஆந்திரா அரசு கட்டாமல் இருந்தால் பல லட்சம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், 2வது முறையாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழ்நாடு அரசு உடனடியாக பாலாறு குறுக்கே தடுப்பணைகளை கட்டி விவசாயத்திற்கு பயன்பெறும் வகையில் பாலாறு நீரை சேமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST