ஆரணியில் தரமற்ற குடிநீர் விற்பனை செய்த ஆலைக்கு சீல்.. உணவு பாதுகாப்பு துறை அதிரடி! - food safety department Tamil Nadu
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: ஆரணி நகரில் உள்ள சேவூர் பைபாஸ் பகுதியில் இயங்கி வந்த ப்ரீயா அக்ரோ என்ற குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனம் மற்றும் ராட்டினமங்கலம் பகுதியில் இயங்கி வந்த வெற்றி அக்குரோ மற்றும் அம்மு அக்ரோ ஆகிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்கள். ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தினமும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர்.
இந்த குடிநீர் சுத்திகரிக்கப்பட்டும் நிறுவனங்களில் தர மற்ற முறையில் குடிநீர் வழங்குவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடிநீர் நிறுவனங்களில் திடீர் சோதனை செய்ததில், தரமற்ற முறையில் சுகாதாரமற்ற முறையில் பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் உணவகங்களுக்கும் குடிநீர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும் ராட்டினமங்கலம் பகுதியில் இயங்கி வந்த, வெற்றி அக்ரோ என்ற குடிநீர் நிறுவனம் ஒரே விலாசத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதல் பெற்று முறைகேடாகக் குடிநீர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும் குடிநீர் பாட்டில்களைச் சுத்தம் செய்யாமல் சுகாதாரமற்ற முறையில், தரமற்ற குடிநீரைப் பாட்டில்களில் அடைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வந்ததால் அதிர்ச்சியடைந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இரண்டு குடிநீர் நிறுவனங்களுக்கும் பூட்டி சீல் வைத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கடற்கரைப் பகுதியில் படையெடுத்து நிற்கும் ஜெல்லி மீன்கள்; மீன்வளத்துறையினர் ஆய்வு!