டயர் வெடித்ததில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து... 15 பேர் படுகாயம்..! வைரலாகும் வீடியோ..! - ஈடிவி பாரத்
🎬 Watch Now: Feature Video
Published : Nov 2, 2023, 10:40 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள சின்னட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர், சுற்றுலா வேன் மூலம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த தாசம்பாளையம் கிராமத்துக்குத் திருமண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றுள்ளனர். அப்போது, சத்தியமங்கலம் கோவை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில், புங்கம்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது வேனின் பின்புற டயர் வெடித்துள்ளது.
அதனையடுத்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு, சாலையில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் சென்ற 15க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பின்னர், அப்பகுதி மக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த புஞ்சை புளியம்பட்டி காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் செயல்படும் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் வேன் டயர் வெடித்து விபத்துக்குள்ளான காட்சிப் பதிவாகியுள்ளது. தற்போது, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.