Video: தங்களது கடையை தாங்களே உடைத்து நொறுக்கிய திமுக பிரமுகர்கள் - கோவை செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்து வடுகபாளையம் பகுதி அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் குமார் (எ) லிங்கதுரை. திமுகவின் மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவராக உள்ளார். இவருடைய தம்பி, மகாராஜா. இவர்கள் இப்பகுதியில் சிறிய அளவில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இவருடைய கடையின் எதிரே அதிமுக நிர்வாகிகளுடைய இ.சேவை மையம் அமைந்துள்ளது.
இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் குடிபோதையில் அவர்களுடைய கடையிலேயே திமுக கொடியை பிடித்துக் கொண்டு, கண்ணாடி பாட்டில்களை உடைத்துக் கொண்டு, 'நாங்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்; காவல் நிலையம் சென்று நீங்கள் தான் எங்களுடைய கடையினை உடைத்ததாக சொல்லுவோம்' என அந்த பகுதியில் உள்ள அனைவரையும் எச்சரித்து வண்ணம் இருந்துள்ளனர்.
இதனை, காவல் துறையினரும் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கே இருந்த ஒருவர் இதனை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார். அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பாகிவிட்டது.