Viral Video: பிரியாணியில் பூரான்.! உணவுப் பிரியர் அதிர்ச்சி.. - தூத்துக்குடி
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: சாத்தான்குளம் பகுதியில் அமைந்துள்ள யாக்கோபு என்ற உணவகத்தில் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த அன்பு என்பவர் உணவு அருந்துவதற்காக சென்றுள்ளார். அங்கு சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு உணவு வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் செல்போன் பார்த்துக் கொண்டே பிரியாணியை முழுவதுமாக சாப்பிட்டு விட்டார். இறுதியாக இலையை கவணித்த போது, அதில் பூரான் இருந்ததை கண்டு அதிர்ந்து உள்ளார். பின்னர் அதனை தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் இது குறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கூறியபோது, அவர்கள் இலையை குப்பையில் போட்டு விட்டு சாப்பிடதற்கு பணம் வேண்டாம் என கூறியுள்ளனர்.
இருப்பினும் உணவை முழுமையாக சாப்பிட்டு விட்டதாக கூறி அன்பு பணம் கொடுத்துவிட்டு, இது போன்று தரமற்ற உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர், அந்த வீடியோவை தனது வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட உணவு பிரியர்கள், குறிப்பாக பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
மேலும் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத்துறையினர் சாத்தான்குளம் பகுதியில் தரமற்ற முறையில் செயல்பட்டு வரும் உணவகங்களை ஆய்வு செய்து, அந்த ஓட்டல் நிர்வாகத்திற்கு அபராதம் விதித்து சீல் வைக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.