'அடிப்படை வசதிகள் செய்து தாருங்கள்' ஆட்சியர் அலுவலத்தில் சிலிண்டர் அடுப்புடன் கிராம மக்கள் போராட்டம்! - ஆட்சியர் அலுவலத்தில் சிலிண்டர் அடுப்புடன்
🎬 Watch Now: Feature Video
சிவகங்கை: இளையான்குடி அருகே இ.சுந்தனேந்தல் கிராமத்தில் சுமார் 120-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இக்கிராமத்திற்கு குடிநீர் தேவைக்காக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வரும் குடிநீரை மட்டுமே முழுமையாக நம்பி வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனை வலியுறுத்தி, இன்று (ஜூன் 8) சுமார் 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிலிண்டர், அடுப்பு, சமையல் பாத்திரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காவிரி குடிநீர் சரிவர கிடைக்காமல் அவதியடைந்து வரும் நிலையில், அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும், மின்சாரம் அடிக்கடி தடைபட்டும், குறைந்த மின்னழுத்தத்தினால் அவதிப்பட்டும் வருவதாகவும் அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், விவசாயத்திற்கு பயன்பாடும் அங்குள்ள கண்மாயை தூர்வாரியும், நீர் வெளியேறும் மடை சேதமடைந்த நிலையில், இதற்கு பதிலாக புதிய மடை அமைத்து தருமாறு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, தங்களின் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு கழிப்பறை வசதி அமைத்து தர வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பலமுறை சந்தித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: கோயம்பேட்டில் தங்க நகையை அபேஸ் செய்த எம்.பி.ஏ பட்டதாரி.. போலீசிடம் சிக்கியது எப்படி?