வேப்பமரத்தில் இருந்து வடியும் பால்.. திருவண்ணாமலையில் அதிசயம்! - neem tree
🎬 Watch Now: Feature Video
Published : Oct 5, 2023, 10:20 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் நம்மியந்தல் கிராமத்தில் வேடியப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் அப்பகுதி மக்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்குகிறது. இங்கு சென்று வழிபட்டால் நினைத்த காரியம் உடனடியாக நடைபெறும் என அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
மேலும், விஷேச நாட்களில் இந்த கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில், கோயிலின் அருகே உள்ள வேப்பமரத்தில் இருந்து திடீரென பால் வடிந்ததால், அப்பகுதி கிராம மக்கள் மரத்திற்கு மஞ்சள் தடவி, சிவப்பு பொட்டு வைத்து அம்மன்போல் அலங்கரித்து வழிபட்டு வருகின்றனர்.
மேலும், சில பக்தர்களுக்கு இந்த வேடியப்பன் கோயில் குலதெய்வ கோயிலாக விளங்குகிறது. பொதுமக்கள் காலம் காலமாக இந்த கோயிலை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இருந்த வேப்பமரத்தில் பால் வடிந்ததால் மரத்தில் கடவுள் இருப்பதாக எண்ணி, அப்பகுதி மக்கள் ஒன்றாக திரண்டு வழிபட்டு வருகின்றனர்.