குன்னூர் - மேட்டுபாளையம் சாலையில் மண் சரிவு: போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மத்திய இணை அமைச்சர் வாகனம்!
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, குன்னூர் - மேட்டுபாளையம் தேசிய நெஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி வழியாக மேட்டுப்பாளையம் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பயணித்த வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழைப்பெய்து வரும் நிலையில் இன்று(டிச.10) காலை குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, இன்று(டிச.10) காலை மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டு இருந்த போது மண் சரிவால் போக்குவரத்து நெரிசலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சிக்கி கொண்டார்.
தொடர்ந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிய இணைஅமைச்சர் நெடுஞ்சாலை துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சாலையில் ஏற்பட்ட மண் சரிவு சீரமைக்கும் பணியை துரிதப்படுத்தினார். ஒன்றரை மணிநேர சீரமைப்புக்கு பணிக்குப் பின்னர், மத்திய அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதுபோன்று பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சேதமடைந்த சாலைகளில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்து துவங்கும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.