வாகமன் கண்ணாடி பாலத்தை காண குவியும் சுற்றுலா பயணிகள்.. கிறங்கடிக்கும் நுழைவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்! - todays news
🎬 Watch Now: Feature Video
Published : Sep 27, 2023, 1:13 PM IST
|Updated : Sep 27, 2023, 5:09 PM IST
கேரளா: இடுக்கி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று, வளங்கள் கொஞ்சும் வாகமன். வாகமன்னில் சிறிய சாரலோடு மேகங்கள் தழுவ பச்சை பசேல் என்று இருக்கும் மலைத் தொடர்களைக் காண்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிவது வழக்கம்.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக பாராகிளைடிங், அட்வென்சர் ஜோன், பர்மா பிரிட்ஜ், ரோஸ்பார்க் என பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக அமைந்துள்ளன. இந்நிலையில் கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 200 அடி உயரத்தில் 120 அடி நீளத்தில் கண்ணாடி பாலம் ஒன்றை கேரள சுற்றுலாத்துறை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.3 கோடி செலவில் அமைக்கத்தக்கது.
இந்த நீளமான கண்ணாடி பாலத்தைப் பார்வையிட கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த கண்ணாடி பாலத்திற்கு முதலில் நுழைவு கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்பட்டது. கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்த நிலையில் ரூ.250 ஆக குறைக்கப்பட்டது.
கண்ணாடி பாலத்தில் இருந்து இயற்கை எழில்மிகு அழகை பத்து நிமிடங்கள் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்பட்டும் நிலையில் நுழைவுக் கட்டணம் ரூ.250 அதிகமாக உள்ளதாகவும் அதை ரூ.100 ஆக குறைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.