கொடைக்கானலின் அழகை தொலைநோக்கி மூலம் கண்டு ரசித்த சுற்றுலாத்துறை அமைச்சர்! - திண்டுக்கல் மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கொடைக்கானலில் நாளை (மே 26) நடைபெற இருக்கும் மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நிகழ்ச்சிக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக வருகை புரிந்த தமிழ்நாடு சுற்றுலாத்துறைத் அமைச்சர் ராமச்சந்திரன் இன்று கொடைக்கானல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான படகு இல்லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வில் சுற்றுலாப் பயணிகளுக்கு படகு சவாரி மேற்கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நகராட்சிக்கு சொந்தமாக அமைக்கப்பட்டு வரும் படகு இல்லத்தை பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.
மேலும் கோக்கர்ஸ் வாக் பகுதிக்கு சென்று அங்குள்ள தொலைநோக்கி மூலம் இயற்கை அழகை கண்டு ரசித்தார் கோக்கர்ஸ் வாக் பகுதியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க கூடுதல் நேரம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
தமிழ்நாடு சுற்றுலா துறைக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். தங்கும் விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் நடைபாதை உள்ளிட்டவற்றை சரி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இந்த நிகழ்வில் கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, திமுக நகரச் செயலாளர் முகமது இப்ராகிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Bogar Jayanthi Festival : பழனியில் களைகட்டிய போகர் ஜெயந்தி விழா!