வீடியோ: ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் புலியும் கரடியும் நேருக்கு நேர் மோதல் - உத்தரகாண்ட் புலிகள் காப்பகம்
🎬 Watch Now: Feature Video
ராம்நகர்: உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகரில் உலகப் புகழ் பெற்ற ஜிம் கார்பெட் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் பல்வேறு வகையான விலங்கினங்கள் உள்ளன. இந்த விலங்குகளை காண நாள்தோறும் ஆயிரணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு எப்போதாவது தான், புலிகளை காணும் வாய்ப்பு கிடைக்கும்.
அதிலும் புலி வேட்டையாடும் காட்சிகளும், சண்டையிடும் காட்சிகளும் காண்பதற்கு மிக அரிதாகும். இருப்பினும், சில சுற்றுலா பயணிகளுக்கு காண வாய்ப்பு கிடைப்பது உண்டு. அந்த வகையில் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் புலியும் கரடியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சிகளை அண்மையில் சுற்றுலா பயணிகள் கண்டுள்ளனர்.
அதோடு அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த காட்சியில் இரண்டு விலங்குகளும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. இந்தப் போராட்டத்தின் முடிவில் கரடி தோல்வியடைந்து உயிரிழக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலி உயிரிழப்பு - காரணம் என்ன ?