கீழ வன்னிப்பட்டு துள்ளும் சோறு படையல் விழா: 3 கிலோ மீட்டருக்கு 64 வகை உணவுகளை வைத்து படையல்!
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: கீழ வன்னிப்பட்டு கிராமத்தில் குன்னம் அய்யனார் பொங்காலம்மன் ஆலயம் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆலயத்தில் துள்ளும் சோறு படையல் விழா நடைபெற்று வருகிறது. அதாவது வைகாசி மாதத்தில் 3 நாள் விழாவாக இக்கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதைப்போல் இந்தாண்டு கடந்த 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கோயில் விழா நடைபெற்றது. முதல் நாள் அன்று தேர் திருவிழா, இரண்டாம் நாள் முளைப்பாரி மற்றும் மூன்றாம் நாள் அமுது படையல் விழா என கிராமமே விழாக்கோலம் பூண்டு கொண்டாடியது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான துள்ளும் சோறு படையல் விழாவை முன்னிட்டு சுமார் 3 கிமீ தூரத்திற்கு துணி விரிக்கப்பட்டு அதில் பெண்கள் அறுபத்து நான்கு வகையான பல்வேறு காய்கறிகளை கொண்டு சமைத்து எடுத்து வரப்பட்ட அன்னத்தை பொது மைதானத்தில் வரிசையாக படையலிட்டு பூஜை செய்து குடும்பம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என சாமியை வழிப்பட்டனர்.
மேலும் அந்த காலத்தில் இருந்து இவ்வூரில் சில பழக்க வழக்கங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனால் அந்த பழக்கத்தை விடாமல் தொடர்ந்து இக்கிராம மக்கள் பாரம்பரியமாக பழமை மாறாமல் செய்து வருவதாகவும் கிராமத்தினர் தெரிவித்தனர்.