ஈசானிய லிங்கம் குப்பைக் கிடங்கில் பற்றிய தீ - தீயணைப்புத் துறையினர் திணறல் - Thiruvannamalai garbage dump fire accident
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை நகரில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இந்த 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை ஆகியவை ஈசானிய லிங்கம் அருகே உள்ள மைதானத்தில் தினந்தோறும் கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த குப்பைக் கிடங்கில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த குப்பைக் கிடங்கில் சுமார் 5 மணி நேரமாக தீ பற்றி எரிந்து வருகிறது. இவ்வாறு பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவே அமைக்கப்பட்டு இருக்கும் குப்பைக் கிடங்கை, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக மாவட்ட நிர்வாகத்துக்கு திருவண்ணாமலை மற்றும் வேங்கிக்கால் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும், தற்போது வரை மாவட்ட நிர்வாகம் குப்பைக் கிடங்கை மாற்றி அமைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேநேரம், இவ்வாறு அவ்வப்போது ஏற்படும் தீ விபத்தால் வெளியேறும் கரும்புகை காரணமாக, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சுவாசப் பிரச்னைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.