வடிவேலு பாணியில் பட்டா நிலத்தைக் காணவில்லை என பரபரப்பு புகார் - land issue in pollachi
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தென் சங்கம்பாளையம் ஊராட்சியில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவையில் வைத்து கடந்த 6 வருடங்களுக்கு முன்பு, 22 பயனாளிகளுக்குப் பட்டா வழங்கப்பட்டது.
இவ்வாறு பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய நிலையில், இதுவரை இடம் ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா இருக்கும் இடம், நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை பாணியில் காணவில்லை என்றும், எங்களுக்கு வழங்கப்பட்ட இடம் வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள், இன்று (மே 3) ஆனைமலையில் நடைபெற்ற ஜமாபந்தியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்தனர்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் பட்டா கொடுத்து விட்டு தற்போது வரை இடம் இல்லாமல் தவிக்கும் தங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என மனு கொடுத்துள்ளதாகவும், அரசு உடனடியாக தங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.