‘செங்கோல் மத அடையாளம் அல்ல’ - தருமபுரம் ஆதீனம் பேட்டி! - புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா
🎬 Watch Now: Feature Video
சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் கலந்துகொள்ள டெல்லி செல்வதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், “நாடாளுமன்ற கட்டடம் ஒரு அற்புதமானது. தர்மத்தின் அடையாளமாக நந்தி உள்ளது. நந்தி அனைத்திற்கும் பொதுவானது. செங்கோல் குறிப்பிட்ட மதத்தின் அடையாளம் அல்ல” என்றார். தொடர்ந்து, எல்லா சமயத்திற்கும் இடம் கொடுத்த பூமி அழைப்பிதழில் ஆதினங்களின் புகைப்படம் போடவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “அதிகமான ஆதீனங்கள் கலந்து கொள்வதால் புகைப்படங்கள் போடாமல் இருந்திருக்கலாம்.
சேரர், சோழர், பாண்டியர் மூன்று மன்னர்களாலும் ஆதீனங்களின் சீடர்களாக விளங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு மன்னர்களுக்கும் ஆதீனங்கள் அரசவையில் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். செங்கோல் ஆதீனம் என்று ஒரு ஆதீனம் இருக்கிறது. அந்த நாடாளுமன்றம் ஒரு புண்ணிய பூமி என்ற நிருபீக்கும் வகையில் திகழ வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘செங்கோல் குறித்து பொய்யான செய்திகள் பரவுவது வருத்தமளிக்கிறது’ - திருவாவடுதுறை ஆதினம் வருத்தம்