மண் குதிரையை நம்பாதே என்பது பழசு.. முதியவரை வாழ வைக்கு மண் குதிரை இது புதுசு..! - மண் குதிரை செய்யும் முதியவர் வீடியோ
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரம்பரியமாக மண்பாண்ட தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது உள்ள நவீன உலகில் மண்பாண்ட பொருள்களுக்குக் கிராக்கி இல்லாததால் இத்தொழிலை நம்பி வாழும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், சரியான வருமானம் இல்லாததால் பாரம்பரிய தொழிலைக் கைவிட்டுவிட்டு மண்பாண்ட தொழிலாளர்களில் பல பேர் வேறு பிழைப்பைத் தேடி வெளி மாநிலங்களுக்குக் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில், மேல்பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் என்ற மண்பாண்ட தொழிலாளி பாரம்பரிய தொழிலைக் கைவிட முடியாமலும், வேறு வேலை தேடி அலைய உடல் மறுப்பதாலும் தொடர்ந்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
மண் குதிரை, மண் அடுப்பு போன்றவைகள் தயார் செய்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில் பிழைப்பு நடத்தி வருகிறார். மண் குதிரையை நம்பாதே’ எனப் பெரியோர்கள் கூறுவது வழக்கம். ஆனால், அந்தப் பழமொழியை மாற்றி ‘மண் குதிரையை மட்டுமே நம்பி தன்னம்பிக்கையுடன் ஜெயவேல் பிழைப்பு நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: பச்சிளம் குழந்தைகளுக்கு ஆன்டிபயாடிக்? - மருத்துவர்களின் பரிந்துரை என்ன?