அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி கோர விபத்து! நடுரோட்டில் பற்றி எரிந்த மின் பேருந்து! நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்! - thiruvallur news today
🎬 Watch Now: Feature Video
Published : Sep 22, 2023, 1:05 PM IST
திருவள்ளூர்: பூவிருந்தவல்லி அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பேட்டரி சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்துப் குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேட்டரி பேருந்து ஒன்று பயணிகளுடன் பெங்களூரு சென்று கொண்டு இருந்தது. சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை கடந்த போது முன்னாள் சென்ற அரசு பேருந்து ஒன்று திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால் பின்னால் பயணிகளுடன் வந்த மற்றொரு தனியார் பேருந்து பேட்டரி பேருந்தின் பின்புறத்தில் மோதியது. இதில் பேட்டரி பேருந்தின் பின்புறம் சேதமடைந்து தீ பற்றியது. இதனையடுத்து அருகே இருந்தவர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுகடங்காமல் எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அதற்குள் தீ மளமளவென பரவி பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்பு கூடாக மாறியது. பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து காரணமாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.