கோவையில் வரும் 7ம் தேதி ’முதலமைச்சர் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சி’ - covai news
🎬 Watch Now: Feature Video
கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், ' "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை'' என்ற முதலமைச்சர் ஸ்டாலின் குறித்த புகைப்படக் கண்காட்சி சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவையிலும் நடைபெற உள்ளது. வ.உ.சி மைதானத்தில் வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி இந்த புகைப்பட கண்காட்சி மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படுகிறது. இது வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை நடைபெறும்’’ எனத் தெரிவித்தார்.
மேலும் புகைப்பட காண்காட்சியைத் திறந்து வைக்கும் சிறப்பு விருந்தினர் இன்னும் முடிவாகவில்லை எனத் தெரிவித்த அவர், இந்தக் கண்காட்சியில் 300க்கு மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெறுகிறது எனவும், இதில் கோவை மாநருக்கு முதல்வர் கொடுத்த திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழைத்து வரப்படுவார்களா? என்ற கேள்விக்கு, ”யாரையும் கட்டாயப்படுத்தி அழைத்து வருவதில்லை, விருப்பத்தின் பெயரால் மட்டுமே கண்காட்சிக்கு வருவார்கள்” எனவும் அவர் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம், தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் ஏதும் அளிக்காமல் தவிர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.