பேருந்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் - கண்டுகொள்ளாத அதிகாரிகள் - அரசு பள்ளி
🎬 Watch Now: Feature Video
வேலூர்: மாநகருக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் காலையும், மாலையும் பள்ளி சென்று திரும்ப போதிய பேருந்து வசதி இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை (நவ.28) வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஆற்காடு செல்லும் மிகவும் நெரிசலான சாலையில் சென்ற அரசு பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் பேருந்துக்கு வெளியே தொங்கியபடி மிக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். இது தொடர் கதையாக உள்ள நிலையில் அரசும், போக்குவரத்து துறையும் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST