G20 Summit: தமிழர் பெருமை பறைசாற்றும் தஞ்சாவூர் ஓவியக் கூடம்! பாரத் மண்டபத்தை அலங்கரிக்கிறது! - 18 ஆவது ஜி20 மாநாடு
🎬 Watch Now: Feature Video
Published : Sep 9, 2023, 7:25 AM IST
|Updated : Sep 9, 2023, 7:23 PM IST
புதுடெல்லி: 18வது ஜி20(G20) நாடுகளின் உச்சி மாநாடு இந்தியா தலைநகர் டெல்லியில் இன்றும் (செப்.9) நாளையும் (செப். 10) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இம்மாநாட்டில் இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரபேியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள் கொண்ட அமைப்புகளைக் கொண்டதால் இது ஜி20 அமைப்பு என கருதப்படுகிறது.
கடைசியாக இந்த அமைப்பின் உச்சி மாநாடு கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்றது. தொடர்ந்து 2023 ஆம் ஆண்டுக்கான ஜி20 அமைப்பின் பொறுப்பு இந்திய பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. ஜி20 மாநாட்டை தொடர்ந்து ஆண்டு தொடக்கம் முதல் நாட்டின் பல்வேறு நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அதன் இறுதியாக உச்சி மாநாடு இன்று (செப். 09) டெல்லியில் நடைபெறுகிறது. மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தின் முகப்பு பகுதியில் உலக விருந்தினர்கள் வியக்கும் வகையில் 27 அடி உயர பிரம்மாண்ட நட்ராஜர் சிலை வைக்கப்பட்டு உள்ளது. தங்கம் உள்ளிட்ட 8 உலோகங்களால் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலை உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை நிலை நாட்டும் வகையில் தலைத்தோங்க நிற்கிறது.
ஜி20 மாநாட்டில் நாட்டின் முக்கிய பெருமைகளை காட்சிப்படுத்தப்படும் விதமாக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், தஞ்சாவூரைச் சேர்ந்த ஓவியக் கலைக்கூடம் பாரத் மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது. கலைகளின் கோயிலான தஞ்சாவூர் சிற்பங்கள், ஓவியங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.