லாஸ்ட் ஒன் ஹவர் படிக்காதீங்க.. +12 மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு டிப்ஸ்..
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற இருக்கிறது. அந்த வகையில் நாளை (மார்ச் 13) 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை மொத்தமாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கி வீடியே வெளியிட்டுள்ளார். அதில், தேர்வின்போது மாணவர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து விளக்கி உள்ளார். குறிப்பாக, தேர்வுக்கு செல்லும்போது பேருந்து, இருசக்கர வாகனம், காரில் அமர்ந்து கொண்டு படிக்காதீர்கள். கடைசி ஒரு மணி நேரத்தில் படித்தால் சற்று பதற்றம் ஏற்படும் என்பதால் படிக்காதீர்கள், அமைதியாக இருங்கள்.
தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை ஒரு முறைக்கு இரண்டு முறை படித்து பதில் எழுதுங்கள். தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதிலளியுங்கள் உள்ளிட்ட டிப்ஸ்களை வழங்கியுள்ளார். முன்னதாக, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், இது ஜஸ்ட் ஒரு தேர்வு என்று மனதில் வைத்து தைரியமாக எழுதுங்கள் என்று அறிவுரை வழங்கி இருந்தார்.