All the Best: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! - MK stalin
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17966563-thumbnail-4x3-mkstalin.jpg)
சென்னை: தமிழகத்தில் நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில், 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எந்த பயமும் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் படிக்கும் புத்தகத்திலிருந்து தான் கேள்வி வரப்போகிறது. உங்களுக்கு தன்னம்பிக்கையும் மனவுறுதியும் தான் தேவை. அது இருந்தாலே நீங்கள் பாதி வெற்றி பெற்றதாகும்.
தேர்வு என்பது உங்களை பரிசோதிக்க அல்ல. உங்களை உயர்த்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தான். அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள். தேர்வை கண்டு பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக முழுமையாக எழுதுங்கள்.
நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். முதல்வராக இல்லாமல் உங்கள் குடும்பத்தில் ஒருவராக வாழ்த்தி உங்கள் வெற்றிக்காக் காத்திருக்கிறேன். ஆல் தி பெஸ்ட்" என அந்த வீடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
நாளை (மார்ச்.13) முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. ஏறத்தாழ 8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.