Video: காசி விஸ்வநாதர் கோயிலில் ஆடிப்பாடிய தமிழ் பக்தர்கள்
🎬 Watch Now: Feature Video
வாரணாசி: காசி விஸ்வநாத் கோயிலில் முதல்முறையாக தனித்துவமான காட்சி காணப்பட்டது. பாபா விஸ்வநாதரின் பிரதான சதுக்கத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்த பக்தர்கள் குழு பக்தியுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். காசி தமிழ் சங்கமம் திட்டத்தின்கீழ், தமிழ் பேசும் பக்தர்கள் நேற்று(டிச.03) ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலை அடைந்தனர். கோயிலின் பாரம்பரிய முறைப்படி பக்தர்கள் அனைவருக்கும், மாலை அணிவித்து வரவேற்றனர். பின்பு கோயிலின் முற்றத்தில் பக்தர்கள் தமிழ் நாட்டுப்புற பாடல்களான தெம்மாங்கு பாடல்களைப்பாடி, நடனமாடினர். தமிழ் பேசும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இசைக்கருவிகளின்றி தாளத்துடன் நடனமாடியதை காண ஏராளமான பக்தர்கள் சதுக்கத்தில் திரண்டிருந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST