கடம்பூர் மலை அருவிகளிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டிய மழையால் வெள்ளம்... வாகன ஓட்டிகள் அவதி - Motorists suffer
🎬 Watch Now: Feature Video
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், குன்றி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு ஓடைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் போன்பாறை, மல்லியம்துர்க்கம் போன்ற இடங்களில் மலை அருவியாக ஆர்ப்பரித்து கொட்டியது. கடம்பூரில் இருந்து கே.என் பாளையம் செல்லும் மலைப்பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை ஏற்பட்டது. கடம்பூரில் இருந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் வெள்ளத்தின் அச்சம் காரணமாக 1 மணிநேரம் காத்திருந்தன. வெள்ளம் வடிந்த பின் மீண்டும் வாகனனங்கள் இயங்கின.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST