ஆல்பர்ட் திரையரங்கில் காவாலா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ரசிகர்கள் - ஜெயிலர் ரிலீசுக்கு ரசிகர்கள் கொண்டாட்டம்
🎬 Watch Now: Feature Video
சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 8) திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம் ரஜினி ரசிகர்களுக்கு எப்போதும் தனி இடமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஆல்பர்ட் திரையரங்கத்தில் ஜெயிலர் படம் வெளியானதை அடுத்து கோலாகலமாக ரசிகர்களால் கொண்டாப்பட்டது. இந்நிலையில், ரஜினி ரசிகர்கள் சிலர் கூறியதாவது, ''தமிழகத்தில் அதிகாலை சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டது. வருத்தம் அளிக்கிறது. மேலும், சாதாரண நாளில் படம் வெளியானது சிறிது வருத்தம் அளித்தாலும், எங்கள் தலைவர் படம் வெளியான நாள் தான் எங்களுக்கு விஷேச நாள்” என்று தெரிவித்தனர்.
ரசிகர்களின் கொண்டாட்டம்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அனைத்து திரையரங்குகளும் "ஹவுஸ் ஃபுல்" காட்சிகளுடன் ஜெயிலர் துவங்கியுள்ளது. ஆல்பர்ட் திரையரங்கத்தில், ரசிகர்கள் போஸ்டர்களுக்கும், பேனர்களுக்கும் பால் அபிஷகம் செய்தனர். அதைத் தொடர்ந்து, ஆட்டம் பாட்டம் என்று விழாக் கோலமாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் இந்த திரையரங்கத்தில் பல பிரபலங்கள் ஜெயிலர் திரைப்படத்தைக் காண வருகை தந்தனர். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தமிழ் ரசிகர்கள் படையடுத்தனர். காலை முதலே படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.