'தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் நாளை முதல் ஸ்டிரைக்' - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு! - தனியார் பள்ளிகள் வேலை நிறுத்தம்
🎬 Watch Now: Feature Video
கள்ளக்குறிச்சி சின்னசேலம் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் நாளை முதல் இயங்காது எனவும்; மேலும், தொடர் வேலை நிறுத்தம் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கிட செய்வது என்று முடிவெடுத்து இருப்பதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அவ்வமைப்பின் மாநிலத்தலைவர் கே.ஆர். நந்தகுமார், இந்த அறிவிப்பினை காணொலி வாயிலாக வெளியிட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST